சீன பொருட்களுக்கு வரி விதிக்கத் தயார்

 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் புதிதாக 10 வீதம் வரியினை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் ஆரம்பத்தில் அமுலுக்கு வரும் வகையில் சீன பொருட்களுக்கு 10 வீதம் வரி விதிக்கப்படுகிறது.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மார்ச் 4 ஆம் திகதி முதல் 25% வரி விதிக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த இரு நாடுகளும் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால், மார்ச் 4 ஆம் திகதி முதல் மெக்சிகோ மற்றும் கனடா பொருட்களுக்கு 25 வீதம் வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அதிகளவான போதைப்பொருள் வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.