சீனா-பீஜிங்கில் வேகமாக பரவும் கொவிட் 19 தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனா-பீஜிங் நகரில் கொவிட்-19 தொற்று மிக வேகமாக பரவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி, முதற்கட்டமாக பீஜிங்கில் உள்ள 22 மில்லியன் பேரும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் 287 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.