Last updated on January 4th, 2023 at 06:53 am

சீனா அரிசியை வேக வைப்பதில்தான் சிக்கல் - சீன தூதுவர் விளக்கம் | Minnal 24 News

சீனா அரிசியை வேக வைப்பதில்தான் சிக்கல் – சீன தூதுவர் விளக்கம்

சீனா அரசாங்கம் வழங்கிய அரிசியை மிதமான வெப்பநிலையில் சில நிமிடங்களில் வேக வைத்து எடுக்க வேண்டும் என , இலங்கைக்கான சீன பிரதித் தூதர் யாழில் விளக்கம் அளித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். செஞ்சிலுவை சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நிலையில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

சீன வழங்கிய 10 கிலோ அரிசிசை சமைக்கும்போது களியாகிறது அல்லது பசைத்தன்மை அதிகம் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுவதாக ஊடகவியலாளர் ஒருவரால் தூதருக்கு எடுத்து கூறப்பட்டது.

இதன்போது பதில் அளித்த தூதுவர், தம் வழங்கிய அரிசியை சமைக்கும் முறை முறையில் தான் பிரச்சினை இருக்கிறது மிருதுவான வெப்ப நிலையில் சமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க