சீனாவில் வலுப்பெறும் யாகி சூறாவளி

சீனாவின் தெற்கு பகுதிகளில் ‘யாகி’ (Yagi) சூறாவளி வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானச் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

‘யாகி’ சூறாவளி நேற்று புதன்கிழமை இரவு வலுப்பெற்றது.

அதனால் சீனாவின் தெற்கு கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் குறித்த சூறாவளி இன்று வியாழக்கிழமை மதியம் முதல் நாளை வெள்ளிக்கிழமை வரை தெற்கு கரையோரப் பகுதியை நோக்கிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்