சீனாவில் பெரியோர்மத்தியில் பிரபல்யமாகியுள்ள “சூப்பி”

சீனாவில் குழந்தைகளை அமைதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபேசிஃபயர்கள் (Pacifiers), எதிர்பாராதவிதமாக பெரியவர்களிடையே ஒரு புதிய டிரெண்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி”பெரியவர்களுக்கான ஃபேசிஃபயர்கள்” மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக பிரபலமடைந்து வருகின்றன.

இந்த தயாரிப்பு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவுவதாக மக்கள் கூறினாலும் இந்த மோகம் மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது பயனர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

‘தி கவர்’ என்ற மீடியா அறிக்கையின்படி சிலிக்கான் அல்லது ரப்பரால் செய்யப்பட்டது.மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல உறக்கத்தைத் தரும் என்று உறுதியளித்து குழந்தைகளின் தயாரிப்பை பெரியவர்களுக்கான பதிப்பாக சந்தைப்படுத்தப்படுகிறது. சில இணையவழி விற்பனையாளர்கள் இதை விற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.