சீனாவில் புதிதாக கண்டறியப்பட்ட 8 புதிய வைரஸ்கள்…

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்தையுமே முடக்கிப்போட்டது. உலக அளவில் பல நாடுகளில் பல இலட்சம் உயிர்களை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.

இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர். மேலும் மாநிலங்கள், நாடுகள் இடையேயான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன. இந்த மாபெரும் பொது முடக்கத்தால் தொழில்கள் முடங்கி, மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பல நாடுகள் மிகப்பெரிய பொருளாதாரா நெருக்கடியை சந்தித்தன. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது.

2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட நிலையில் அந்த வைரஸ் பரவல் சீனாவில் இருந்து தான் பரவியது என உலக நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் பயோ வாரை தொடங்குவதற்காக சீனா மேற்கொண்ட ஆய்வின்போது கொரேனாா வைரஸ் வெளிப்பட்டு உலகம் முழுவதும் பரவியதாக சில நாட்டு தலைவர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் சீனா தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வின்போது வெளவால்கள் உள்பட கொறித்துண்ணும் உயிரினங்களிடம் இருந்து 700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள 8 வைரஸ்களில் ஒரு வைரஸ் என்பது SARS-COV-2 எனும் கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். அந்த வைரசுக்கு CoV-HMU-1என ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.

அதே போல் சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மற்றொரு வைரஸ் பரவினால் யெல்லோ ஃபீவர் மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் மற்றொரு வைரஸ் Stomach bug என்ற பாதிப்பை உண்டாக்குமாம். விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மற்றொரு வைரஸ் பரவினால் மனிதர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகளிலும் இது போன்ற பல வைரஸ்கள் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த புதிய வைரஸ்கள் பரவ தொடங்கினால் அவை மனிதர்களை எளிதாக தொற்றும். வைரஸ் தொற்று ஏற்பட்டால் மனிதர்களுக்கு பல்வேறு கொடிய நோய்கள் உண்டாகும். அதை குணப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிப்பதற்குள் மனிதர்கள் உயிரிழக்கும் அபாயமும் உண்டாகலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுதொடர்பான விபரம் வைரலாஜிகா சினிகா எனும் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்