சீனாவில் பதிவான நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

இந்த நிலநடுக்கமானது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை யுனன் மாகாணம் – குன்மிங் நகரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ரிச்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.