
சீனாவில் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி
தென்மேற்கு சீனாவில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் ஆற்றில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குசோயு மாகாணத்தில் உள்ள உயு ஆற்றில் 4படகுகள் கவிழ்ந்ததில் 80 பேர் ஆற்றில் விழுந்தனர்.
ஆற்றில் மூழ்கியவர்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில் ஏனையவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல குய்சோ மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 84 வாகனங்கள், 83 சாரதிகள் உட்பட 248 பணியாளர்கள், 16 நீருக்கடியில் ரோபோக்கள் மற்றும் 24 படகுகள் அடங்கிய எட்டு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்