
சீனாவில் நில அதிர்வு – 11 பேர் காயம்
சீனாவின் கன்சு (Gansu) மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்துள்ளனர் .ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன .
சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி (Langxi) மாவட்டத்தில் 5.6 மெக்னிடியூட் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது .
இதில், 17 வீடுகள் இடிந்து வீழ்ந்தன.3ஆயிரத்து 500இற்கு மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன.
லாங்சி மற்றும் ஜாங்சியன் மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 800 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் .
இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
