சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள டியங்கா நகருக்கு அருகே இன்று திங்கட்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.