சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

-அம்பாறை நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் சீனாவின் யூவான் மாகாணத்தால் மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட ஒருதொகை பாடசாலை பைகள் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இதன் போது கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைப்பாளர் பி.எம்.எம் ஜௌபர் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான ரணுஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நியாஸ் பிரத்தியேக இணைப்பாளர் முபாறக் உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தக பைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்