சீனப் பிரஜைக்கு பிடியாணை
சீனப் பிரஜை ஒருவர் போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்த நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சீனப் பிரஜையை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்