சீகிரியா சென்ற வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்தார்.

செக் குடியரசைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சீகிரியாவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை சென்றிருந்த போது குறித்த பெண்ணுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் சீகிரியா – கிம்பிஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.