
சிவனொளிபாத மலை உச்சியில் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம்!
-மஸ்கெலியா நிருபர்-
கடந்த 29 ம் திகதி இரவு பெய்த மழையில், சிவனொளிபாத மலை உச்சியில் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கழிவு பொருட்கள் போடப்படுவதால் மண் திட்டுகள் சரிந்து விழுந்தது என தெரிவித்தனர்
பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாத்து வந்த இந்த சிவனொளிபாத மலையை எமது சந்ததிக்கும் விட்டு செல்ல வேண்டும்.
ஆகையால், இனிவரும் காலங்களில் சிவனொளிபாத மலைக்கு செல்லும் அனைத்து பக்தர்களும் பொலித்தீன், பிளாஸ்டிக், போத்தல்கள் மற்றும் உக்கா பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும், என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் மற்றும் சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
