சிவனொளிபாத மலைக்கு தரிசிக்க வரும் மக்கள் இரு வழிகளை பயன்படுத்துமாறு நிஷாந்த பொதுமக்களுக்கு தெரிவிப்பு

சிவனொளிபாத மலைக்கு தரிசிக்க வரும் மக்கள் இரத்தினபுரி ஸ்ரீ பலாபத்த ( ராஜா மாவத்தை ) மற்றும் குருவிட்ட எரந்த ஆகிய இரு வழிகளை பயன்படுத்துமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந்த பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர்கள் குழு ஹட்டன் – நல்லதண்ணி வீதியில் மகாகிரிதம்ப இடத்ததை பார்வையிட்டு புவியியல் உறுதியற்ற தன்மை குறித்து விசாரணை நடத்தியது .

அதன்படி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் வழங்கிய பரிந்துரைக்கமைய இலங்கை இராணுவம் தற்போது செயல்படுத்தி வருகின்றது.

இந்த நாட்களில் வீதி சீர்செய்து உறுதிப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஹட்டன் – நல்லதண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு பயணிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .

எனவே இப்பாதையை தற்போதைக்கு பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

இருந்த போதிலும் ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான வீதியில் தற்போது 300 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் புதிதாக இரும்பு கம்பியால் மிகவும் சக்தி வாய்ந்த முறையில் படிக்கட்டுகள் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றன.

அதற்காக சீமேந்து கற்கள் இரும்பு கம்பி போன்ற பொருட்கள் மாகிரிதம்ப பகுதிக்கு எடுத்துச் செல்லும் பணியில் இராணுவம் மற்றும் வான் ஊர்திகள் ஈடுபட்டு வருகிறது குறுப்பிட தக்கது.

எது எப்படியோ வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு செல்லுவது அதிகரித்து உள்ளது.

நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு சென்று மாகிரிதம்ப பகுதிக்கு சென்று அங்கு இருந்த மாற்று வழி மூலம் மலை உச்சியை அடைகின்றனர்.