சிவனொளிபாத மலைக்கு சென்ற 6 பேர் போதைப்பொருளுடன் கைது
-மஸ்கெலியா நிருபர்-
சிவனொளிபாத மலையில் வைத்து போதைப்பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை, ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 முதல் 33 வரையான வயதுடைய, மொறட்டுவ, மாத்தறை, பாயாகளை, வங்கதொனிய, ஹக்மன, மீகொட பகுதிகளை சேர்ந்த, ஆறு பேர் கஞ்சா, ஜஸ், போதை மாத்திரைகள், வெளிநாட்டு சிகரெட் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர், என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
