
சிவனொளிபாதமலைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு
மஸ்கெலியா விசேட நிருபர்
2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிவனடிபாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தலைமையில இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது .
குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் நோர்வூட் பிரதேச செயலாளர் அம்பகமு பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார அதிகாரிகள் ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இம் முறை சிவனடிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் எவ்வாறு வர வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்று பல தீர்மானங்ளும் இதன்போது எடுக்கபட்டது.
மதுபான வகைகள், போதைப் பொருள், பொலித்தீன், பிளாஸ்டிக் வெற்று போத்தல்கள் உக்கா பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மலைக்கு செல்லும் வீதியில் சுத்தமான குடிநீர் இலவசமாக ஒவ்வொரு குழாய்களிலும் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளதால் பிளாஸ்டிக் போத்தள்களில் குடிநீர் எடுத்து செல்ல வேண்டாம் என யாத்திரியர்களுக்கு பணிக்கப்பட்டு உள்ளது.
ஏதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ம் திகதி பௌர்ணமி நாள் முதல் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 2026 ம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் பருவகாலம் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
