
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று வெள்ளிக்கிழமைமாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சில பிரதேச செயலாளர் பிரிவுகளை அவதானத்துடன் இருக்குமாறும், மேலும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
