சில அத்தியாவசிய பண்டங்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 215 ரூபாவாகவும் ஒரு கிலோ வெள்ளை சீனி  247 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ பருப்பு 278 ரூபாவாகவும் ஒரு கிலோ கடலை 441 ரூபாவாகவும் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 785 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 90 ரூபாவாகவும் ஒரு கிலோ பாசிப்பயறு 92 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்