
சிலி நாட்டில் பாரிய நிலநடுக்கம் : மக்கள் சாலைகளில் தஞ்சம்
தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
