சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு!

தென் அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக ஐரோப்பிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நில அதிர்வானது பூமியிலிருந்து 104 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.