
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
தென் அமெரிக்க நாடான சிலியின் நுபல், மவுலி ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நுபல், மவுலி ஆகிய இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக நுபல், மவுலி ஆகிய 2 மாகாணங்களிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காட்டுத்தீயைப் பற்ற வைத்ததாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்