சிலியில் காட்டுத் தீ: 99 பேர் உயிரிழப்பு

சிலியின் – வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரையில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அந்தநாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் குறித்த பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.இந்நிலையில் 1,400 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுவதாகவும் சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவுசெய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளை இடைநிறுத்தவும், அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக கள மருத்துமனைகளை அமைக்குமாறும் அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் கோடை விடுமுறையின்போது கடலோரப் பகுதிகளுக்குச் சென்றவர்கள் எனவும் இந்த சம்பவத்தினால் 6,000 வீடுகள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வீட்டுவசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.