சிலாபம் பேருந்து விபத்தில் 21 பேர் காயம்
சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.