சிலாபத்தில் 8 பேர் கைது!

சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 18 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.