சிறையில் உள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டுவந்த தாய்!

 

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்தது வைக்கப்பட்டுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

விலேகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மகனைப் பார்ப்பதற்காக குறித்த தாய் காற்சட்டையொன்றை எடுத்துவந்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்