சிறைச்சாலையில் கைதியொருவர் உயிர்மாய்ப்பு

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று புதன்கிழமை உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.

சந்தேக நபரின் இந்த நடவடிக்கையை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் அதற்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் மீது பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததோடு, அதற்கமைய குறித்த சந்தேகநபர் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த சந்தேக நபரின் சடலம் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.