
சிறைச்சாலையில் இருந்து விடுதலையான இளைஞர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிஷாந்தன் (28 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
