சிறைச்சாலைகளில் 58 கைதிகளை காணவில்லையாம்!

சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமிற்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இரவு  வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலின் போது 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்காக கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.