சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து இரு சிறுமிகள் தப்பியோட்டம்

மட்டக்களப்பு கொக்குவில் சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து நீதிமன்றத்தினால் பராமரிப்புக்காக அனுப்பப்பட்ட  இரு சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் ஏறாவூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியுமே இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்