ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார விழா
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட செங்கலடி பிரதேச செயலகத்தின் கலை இலக்கிய விழா நிகழ்வு 2024 செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச கலை இலக்கிய விழா இன்று வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது
செங்கலடி பிரதேச கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் திருமதி அனுஜா மோகனதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு. தனபாலசுந்தரம் பிரதம விருந்தினராகவும் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.பிருந்தன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் ஆரம்பத்தில் நிகழ்விற்கு வருகை அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், நிகழ்வை தொடர்ந்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் வரவேற்பு நடனம், சிறப்பு நடனம் ப ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.
இதன் பின்னர் 2023 2024ஆம் ஆண்டுகளில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பிரதேச மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் கலைஞர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்