சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

-யாழ் நிருபர்-

சுழிபுரத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சங்கானை பிரதேச செயலகம், வேல்ட் விஷன் நிறுவனம் மற்றும் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையம் என்பன இணைந்து முன்னெடுத்த பயிறச்சி பட்டறையினை சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ் கலந்து கொண்டு  ஆரம்பித்து வைத்தார்.

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான உரிமைகள், சிறுவர் சார்ந்த சட்டங்கள் சட்டத்தரணி சாருஜாவின் வழிகாட்டலில் சட்டத்தரணிகளான தர்ஷிகா மற்றும் கஸ்தூரியால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பயிற்சி பட்டறையில் கலைமகள் இலவசக்கல்வி நிலையத்தின் புலம்பெயர் தேச நிதிப்பங்காளர் தர்மினி நித்தியானந்தன், கலைமகள் இலவசக்கல்வி நிலைய உபதலைவர் தலைவர் சிவானந்தன், செயலாளர் சுபகரன், சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ், சட்டத்தரணிகள், மாணவர்கள், கணக்காய்வாளர் பஞ்சலிங்கம் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்