சிறுவர்களுக்கான வியாபார சந்தை
சாய்ந்தமருது பிரிலியன்ட் கல்லூரியினால் வியாபார சந்தை போன்ற சமூகத் தேவைகள் பற்றிய விளக்கத்தைப் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.டபலியு சிஹாப் ஆகில் கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய அதிபர் ரீ.கே.எம்.சிராஜ், சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன விரிவுரையாளர் எம்.பி.நௌஷாட் மற்றும் சாய்ந்தமருது ஆசிப் ஷோ ரூம் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஜிப்ரி ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இச்சந்தை மாணவர்களின் சமூக தொடர்பாடல் திறன் விருத்தியை வெளிக்கொணரும் நோக்கில் முன்பள்ளிக்கு வெளியே பொது இடமொன்றில் நடத்தப்பட்டது மாணவர்களுக்கு சிறந்த வெளிகாட்டலை கொடுக்கும் என்ற அடிப்படையிலும், மரக்கறி மற்றும் பழ வகைகளை இனங்காணும் ஆற்றலைப் பெறல், தராசில் நிறுத்தல் மற்றும் அளத்தல் செய்யும் திறனைப் பெறுதல்,பணப்பரிமாற்றம், ஒன்றிணைந்து ஒரு வேலையில் ஈடுபடும் பழக்கத்தைப் பெற்றுக்கொள்ளல், குழுச் செயற்பாட்டுத் தன்மையை விருத்தி செய்தல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அபிவிருத்தி மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பிர்லியன்ட் கல்லூரி முன் பள்ளியின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் உறவினர்கள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


