
சிறுவர்களுக்காக விசேட திட்டம்
சமீபத்திய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களால் 100,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, புத்தளம் மாவட்டத்தில் 43,000 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்டத்தில் 14,077 சிறுவர்களும் குருநாகல் மாவட்டத்தில் 8,403 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக ஒரு திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, சர்வதேச சிறுவர் நிதியத்துடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கூட்டு வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
