சிறுவயதிலேயே உயிரிழந்த நடிகர்!

பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமான உமர் ஷா (15), திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவரது சகோதரரும் டிக் டாக் பிரபலருமான அகமது ஷா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் உள்ளிட்ட பல பிரபல டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.

சிறிய வயதிலேயே உயிரிழந்தது இரசிகர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.