சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில்,  10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டியினுள் வைத்து குறித்த சிறுவனுக்கு பியரினை பருக்கியுள்ளார்.

சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க