
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: இருவர் கைது
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் கடந்த புதன் கிழமை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முள்ளியவளை பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சிறுமியை இரு வேறு சந்தர்ப்பங்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.
குறித்த துஷ்பிரயோகம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டவுள்ளார் மேலும் இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
