சிறுமி துஷ்பிரயோகம்: சிறுவன் நிர்வாணமாக தப்பி ஓட்டம்

குருநாகல் – கொஹிலகெதர பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 17 வயதுடைய சிறுவனால், 15 வயதுடைய சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சிறுமியின் வீட்டில் பெரியவர்கள் இல்லாத போது குறித்த சிறுவன் பல முறை வீட்டிற்கு வந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இன்று சிறுமியின் பாட்டி மற்றும் அவரது சகோதரி சம்பவத்தை கண்டதையடுத்து, குறித்த சிறுவன் அணிந்திருந்த ஆடைகளையும் விட்டு நிர்வாணமாக தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி, கசிப்பு மற்றும் பிற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.