
சிறுமியை கொடூரமாகத் தாக்கும் காணொளி: வெளியிட்டவருக்கு சன்மானம்
வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமியின் துன்புறுத்தலை காணொளி மூலம் அம்பலப்படுத்திய இளைஞனுக்கு 500,000 ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் இதற்கான காசோலையை இன்று புதன் கிழமை வழங்கி வைத்தனர்.
வெலிஓயா பிரதேசத்தில் 4 வயது சிறுமி ஒருவர் தாக்கப்படுவது போன்ற காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சம்பவத்துடன் தொடர்புடை நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
