சிறுபோக நெல் அறுவடை அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடையில் எதிர்பார்த்த இலக்கை எட்டியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு சிறுபோக நெல் அறுவடை 2 தசம் 6 மில்லியன் மெற்றிக் டன்னாக அதிகரித்துள்ளதுடன் கடந்த சிறுபோகத்தின்போது 2 மில்லியன் மெற்றிக் டன் நெல் அறுவடை பதிவு செய்யப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த பெரும் போகத்தில் 3.2 மில்லியன் மெற்றிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடம் மொத்த நெல் அறுவடை 5 தசம் 8 மில்லியன் மெற்றிக் டன்னாக அதிகரித்துள்ளதுடன், உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு 3 மில்லியன் மெற்றிக் டன்னாகும் என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்