சிறுபான்மை சமூகத்தின் குடியேற்றத்தை அத்துமீறிய குடியேற்றங்களாக காட்டுவதற்கு முனைகிறார்கள்!
முத்து நகர், கப்பல் துறை பிரதேசங்களில் எமது சிறுபான்மை சமூகத்தின் குடியேற்றத்தை அத்துமீறிய குடியேற்றங்களாக காட்டுவதற்கு முனைகிறார்கள், என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
1973 ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் அதிகாரியாக இருந்த முன்னால் பிரதியமைச்சர் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்கள், அதிகமாக காணி இல்லாதவர்களுக்கு வீடும் ஒரு கிணறும் என்ற அடிப்படையில், அவருடைய மாவட்ட அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, நான்கு வருடங்களாக 1977 வரை உட்கட்டமைப்பு வீதிகள் இவீடுகள் போன்றவற்றை வழங்கி இன்றுடன் 55 வருடங்களாகி விட்டது.
நான் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த போது 2019ம் ஆண்டு இறுதி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக முத்து நகர் தொடக்கம் கப்பல் துறை வரையான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டது.
உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட அந்த காணிகளை இப்போது தங்களுடைய ஆதரவாளர்களுக்கு அவர்கள் சார்ந்ணவர்களுக்கு ஐம்பது ஏக்கர், நூறு ஏக்கர் என விவசாயம் செய்கின்ற காணிகளை கொடுக்க முயலுகிறார்கள் இது சட்ட விரோதமானது
எனக்கு முன்னர் துறை முக கப்பல் துறை அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்க மற்றும் அர்ஜூன ரணதுங்க அவர்களும் விடுவித்து நிறைவேற்றிய தீர்மானத்தை ஒருங்கிணைப்பு குழு தலைவர் கவனத்திற் கொள்ளவில்லை என்பது தான் உண்மையான விடயம்
அதற்கான ஆதாரங்கள் கடைசியாக இருந்த முன்னால் அரசாங்க அதிபர் புஷ்பகுமார அவர்களிடம் இருந்து பெற்று ஆவணங்கள் உள்ளது .
இவ் விடயத்தை கவனம் எடுத்து 57 வருடங்களாக விவசாய குடியிருப்பு காணிகளை அபகரிக்க அரசாங்கம் எடுக்க முனைந்தால் அல்லது அதிகாரமுடையவர்கள் இரானுவ பொலிஸார்களை பலவந்தமாக பாவித்து பெண்களை ஆண்களை தாக்க முனைவது பாரியதொரு குற்றச் செயலாகும்.
இதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் முனைகின்றோம், என்றார்.