சிறிய விமானம் விபத்து : மூவர் உயிரிழப்பு!

புளோரிடாவின் போகா ரேட்டனில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் சில இயந்திர சிக்கல்கள் இருந்ததாகவும், இந்நிலையில் விமானம் இராணுவப் பாதையில் விபத்துக்குள்ளானதாக, போகா தீயணைப்பு மீட்புப் பிரிவின் உதவி தீயணைப்புத் தலைவர் மைக்கேல் லாசல்லே தெரிவித்துள்ளார்.

மேலும், விமானம் விபத்துக்குள்ளாகிய போது குறித்த பாதையில் ஒரு கார் நின்றதாகவும், காரில் இருந்தவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க