
சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம் – அதிரடி நடவடிக்கை
ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது.
முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு டிச., 10 முதல் பல மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அதிகபட்ச தொகை அபராதமாக நீதிமன்றமே விதிக்க நேரிடும் எனக் கூறறப்பட்டுள்ளது. அதேவேளை ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து எந்தநேரத்திலும் வெளியேறலாம் என கூகுள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
