சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் விசேடமாக குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் SSP முத்துமால , சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பணியக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.