சிரிய ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ள ரஷ்யா
சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாத்தின் ஆட்சியில் முக்கிய பங்காளியாகக் காணப்பட்ட ரஷ்யா, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தற்போது அடைக்கலம் வழங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிரிய தலைநகர் டமஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாக அரச படைகள் அங்கிருந்து வெளியேறின. அத்துடன், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தும் டமஸ்கஸை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியின் வீழ்ச்சியைக் கொண்டாடி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்