சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது
சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது நம்முடைய (அமெரிக்கா்கள்) போர் அல்ல. அந்நாட்டு ஜனாதிபதி அஸாத் பதவியில் தொடர அமெரிக்கா ஆதரவு அளிக்கும் அளவுக்கு அவா் தகுதி வாய்ந்த நபரல்ல’ என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகமும் சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) அமைப்பு மீண்டும் தலையெடுக்க அமெரிக்கா அனுமதிக்காது’ என்றார்.
சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்காத வகையில் அங்குள்ள 900 அமெரிக்க இராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்