சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் : 5 ராணுவ வீரர்கள் பலி
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இஸ்ரேலின் பல ஏவுகணைத் தாக்குதல்களையும், சிரிய பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.
