சிம் அட்டைகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு

சிம் அட்டைகளை சரிபார்க்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து போலியான சிம் அட்டைகளை பயன்படுத்தி இடம்பெறும் சமூக விரோத செயல்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என அதன் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பின்படி மக்கள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைகளை சரிபார்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.