சிபெட்கோ எரிபொருள் விலைகளும் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டு இதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும். 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டு இதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டு இதன் புதிய விலை 351 ரூபாவாக விற்பனை செய்யப்படும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு இதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.