சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சு பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அறிவிப்பிற்காக எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன, சனத் நிஷாந்த, காமினி லொக்குகே உள்ளிட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அரசாங்கத்தின் உயர்மட்ட அலுவலகத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, தற்போதைக்கு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாவிட்டாலும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் அரசாங்கத்திடம் இருந்து வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்